Senthamil.Org

வெந்தவெண்

தேவாரம்

வெந்தவெண் ணீறணிந்து விரிநுல் திகழ்மார்பின் நல்ல 
பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக் 
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்று{ர் நின்ற 
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
வெந்தவெண் பொடிப்புஜசு மார்பின்விரி நுலொருபால் பொருந்தக் 
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள் 
அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி 
எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே.
வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை வேந்தனை 
அந்தணர் தங்கட வுஜருளா னையணி காழியான் 
சந்தமெல் லாமடிச் சாத்தவல் லமறை ஞானசம் 
பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் பாவமே.
வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல் 
அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர் 
கந்தமார் மலரொடு காரகில் பன்மணி 
சந்தினோ டணைபுனற் சக்கரப் பள்ளியே.
வெந்தவெண் ணீறுபுஜசி விடையேறிய வேதகீதன் 
பந்தண வும்விரலாள் உடனாவதும் பாங்கதுவே 
சந்தமா றங்கம்வேதம் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை 
அந்தமாய் ஆதியாகி அயவந்திய மர்ந்தவனே.
வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச்
சிந்தையுள் இடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம்
பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே.
வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே.
வெந்தவெண் எனத்தொடங்கும் தேவாரம்