Senthamil.Org

வெந்த

தேவாரம்

வெந்த நீற்றினர் வேலினர் நுலினர் 
வந்தென் நன்னலம் வெளவினார் 
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை 
மைந்தர் தாமோர் மணாளரே.
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக் 
கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன் 
சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல் 
பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.
வெந்த நீறணி மார்பிற் றோல்புனை 
அந்த மில்லவன் ஆடானை 
கந்த மாமலர் தூவிக் கைதொழுஞ் 
சிந்தை யார்வினை தேயுமே.
வெந்த குங்கிலி யப்புகை விம்மவே 
கந்தம் நின்றுல வுங்கழிப் பாலையார் 
அந்த மும்மள வும்மறி யாததோர் 
சந்த மாலவர் மேவிய சாந்தமே.
வெந்த நீறுமெய் புஜசிய வேதியன் 
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன் 
கந்த மௌவல்கம ழுங்கரு காவுஜரெம் 
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
வெந்த சாம்பல் விரையெனப் புஜசியே 
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே 
சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால் 
எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ.
வெந்த நீறுமெய் புஜசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண் டீர்அன்னி யூரரே.
வெந்த வெண்பொடிப் புஜசும் விகிர்தரோ
அந்த மில்லி அணிமறைக் காடரோ
எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே.
வெந்த வெண்பொடிப் புஜசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்
எந்தை யென்னிடை மருதினில் ஈசனைச்
சிந்தை யால்நினை வார்வினை தேயுமே.
வெந்த நீறு விளங்க அணிந்திலர் 
கந்த மாமலர் இண்டை புனைந்திலர் 
எந்தை ஏறுகந் தேறெரி வண்ணனை 
அந்தங் காணலுற் றாரங் கிருவரே.
வெந்த நீறுமெய் புஜசவல் லானை
 வேத மால்விடை ஏறவல் லானை 
அந்தம் ஆதிஅறி தற்கரி யானை 
 ஆறலைத் தசடை யானைஅம் மானைச் 
சிந்தை யென்றடு மாற்றறுப் பானைத் 
 தேவ தேவனென் சொல்முனி யாதே 
வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர் 
 மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
வெந்த எனத்தொடங்கும் தேவாரம்