Senthamil.Org

வெண்ணிலா

தேவாரம்

வெண்ணிலா மதியந் தன்னை 
விரிசடை மேவ வைத்து 
உண்ணிலாப் புகுந்து நின்றங் 
குணர்வினுக் குணரக் கூறி 
விண்ணிலார் மீயச் சூரர் 
வேண்டுவார் வேண்டு வார்க்கே 
அண்ணியார் பெரிதுஞ் சேயார் 
அதிகைவீ ரட்ட னாரே.
வெண்ணிலா எனத்தொடங்கும் தேவாரம்