Senthamil.Org

வெண்டலையும்

தேவாரம்

வெண்டலையும் வெண்மழுவு மேந்தி னானை
விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப்
புண்டலைய மால்யானை யுரிபோர்த் தானைப்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
எண்டிசையு மெரியாட வல்லான் றன்னை
ஏகம்ப மேயானை எம்மான் றன்னைக்
கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக் 
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
வெண்டலையும் எனத்தொடங்கும் தேவாரம்