Senthamil.Org

வெஞ்சமர்

தேவாரம்

வெஞ்சமர் வேழத் துரியாயென் 
விண்ணப்பம் மேலிலங்கு 
வஞ்சமா வந்த வருபுனற் 
கங்கையும் வான்மதியும் 
நஞ்சமா நாகம் நகுசிர 
மாலை நகுவெண்டலை 
தஞ்சமா வாழுஞ் சரக்கறை 
யோவென் றனிநெஞ்சமே.
வெஞ்சமர் எனத்தொடங்கும் தேவாரம்