Senthamil.Org

வீட்டினார்

தேவாரம்

வீட்டினார் சுடுவெண் ணீறு 
மெய்க்கணிந் திடுவர் போலுங் 
காட்டில்நின் றாடல் பேணுங் 
கருத்தினை யுடையர் போலும் 
பாட்டினார் முழவ மோவாப் 
பைம்பொழிற் பழனை மேயார் 
ஆட்டினார் அரவந் தன்னை 
ஆலங்காட் டடிக ளாரே.
வீட்டினார் எனத்தொடங்கும் தேவாரம்