Senthamil.Org

வீடரங்

தேவாரம்

வீடரங் காநிறுப் பானும் 
விசும்பினை வேதி தொடர 
ஓடரங் காகவைத் தானும் 
ஓங்கியோ ரூழியுள் ளானுங் 
காடரங் காமகிழ்ந் தானுங் 
காரிகை யார்கள் மனத்துள் 
ஆடரங் கத்திடை யானும் 
ஆரூ ரமர்ந்தஅம் மானே.
வீடரங் எனத்தொடங்கும் தேவாரம்