Senthamil.Org

வீங்கிய

தேவாரம்

வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப் 
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின் 
ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர 
வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே.
வீங்கிய தோள்களுந் தாள்களு 
மாய்நின்று வெற்றரையே 
மூங்கைகள் போலுண்ணு மூடர்முன் 
னேநமக் குண்டுகொலோ 
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த் 
திருமூலத் தானன்செய்ய 
புஜங்கழ லானடித் தொண்டர்க்குத் 
தொண்டராம் புண்ணியமே.
வீங்கிய எனத்தொடங்கும் தேவாரம்