Senthamil.Org

விலங்கலொன்

தேவாரம்

விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும் 
வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம் 
பலங்களால் நேடியும் அறிவரி தாய 
பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில் 
மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும் 
மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து 
கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
விலங்கலொன் எனத்தொடங்கும் தேவாரம்