Senthamil.Org

விரைமலி

தேவாரம்

விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு
வரைமிசை உறைவதும் வலதே
வரைமிசை உறைவதோர் வலதுடை யீருமை
உரைசெயும் அவைமறை யொலியே.
விரைமலி பொழிலணி மிழலையு ளீர்சென்னி
நிரையுற அணிவது நெறியே
நிரையுற அணிவதோர் நெறியுடை யீரும
தரையுற அணிவன அரவே.
விரைமலி எனத்தொடங்கும் தேவாரம்