Senthamil.Org

விரைசெய்

தேவாரம்

விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை 
 வேத கீதனை மிகச்சிறந் துருகிப் 
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப் 
 பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக் 
குரைக டல்வரை ஏழுல குடைய 
 கோனை ஞானக் கொழுந்தினைத் தொல்லை 
நரைவிடை யுடையநல் லாறனை அமுதை 
 நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
விரைசெய் எனத்தொடங்கும் தேவாரம்