Senthamil.Org

விரும்பு

தேவாரம்

விரும்பு மதிக்கண்ணி யானை 
மெல்லிய லாளொடும் பாடிப் 
பெரும்புலர் காலை யெழுந்து 
பெறுமலர் கொய்யா வருவேன் 
அருங்கலம் பொன்மணி யுந்தும் 
ஐயா றடைகின்ற போது 
கருங்கலை பேடையொ டாடிக் 
கலந்து வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் 
கண்டறி யாதன கண்டேன்.
விரும்பு எனத்தொடங்கும் தேவாரம்