Senthamil.Org

விரிகதிர்

தேவாரம்

விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத 
விதியல்லர் விண்ணு நிலனுந் 
திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் 
தெளிநீரு மல்லர் தெரியில் 
அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக 
அருள்கார ணத்தில் வருவார் 
எரியர வாரமார்பர் இமையாரு மல்லர் 
இமைப்பாரு மல்லர் இவரே.
விரிகதிர் எனத்தொடங்கும் தேவாரம்