Senthamil.Org

விரவி

தேவாரம்

விரவி நாளும் விழாவி டைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக்
குரவ மாரும்நீழற் பொழில்மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடை யானை யுள்கிநின் றாத ரித்துமுன் அன்பு செய்தடி
பரவுமாறு வல்லார் பழிபற் றறுப்பாரே.
விரவி எனத்தொடங்கும் தேவாரம்