Senthamil.Org

வின்மையாற்

தேவாரம்

வின்மையாற் புரங்கள் மூன்றும் 
வெந்தழல் விரித்தார் போலும் 
தன்மையால் அமரர் தங்கள் 
தலைவர்க்குந் தலைவர் போலும் 
வன்மையான் மலையெ டுத்தான் 
வலியினைத் தொலைவித் தாங்கே 
நன்மையால் அளிப்பர் போலும் 
நாகஈச் சரவ னாரே.
வின்மையாற் எனத்தொடங்கும் தேவாரம்