Senthamil.Org

வினைகெட

தேவாரம்

வினைகெட மனநினை வதுமுடி 
கெனின்நனி தொழுதெழு குலமதி 
புனைகொடி யிடைபொருள் தருபடு 
களிறின துரிபுதை யுடலினன் 
மனைகுட வயிறுடை யனசில 
வருகுறள் படையுடை யவன்மலி 
கனைகட லடைகழு மலமமர் 
கதிர்மதி யினனதிர் கழல்களே.
வினைகெட எனத்தொடங்கும் தேவாரம்