Senthamil.Org

வித்தக

தேவாரம்

வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
சித்தம துடையவர் திருவே.
வித்தக மறையவர் மிழலையு ளீரன்று
புத்தரோ டமணழித் தீரே
புத்தரோ டமணழித் தீருமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடை யவரே.
வித்தக வீணையொடும் வெண்புரி நுல்புஜண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்று{ரில்
அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
வித்தக எனத்தொடங்கும் தேவாரம்