Senthamil.Org

விண்பணிந்

தேவாரம்

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர் 
 வெருவிட வேழமன் றுரித்தாய் 
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை 
 வாயிலாய் தேவர்தம் மரசே 
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய் 
 சங்கிலிக் காஎன்கண் கொண்ட 
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய் 
பாசுப தாபரஞ் சுடரே.
விண்பணிந் எனத்தொடங்கும் தேவாரம்