Senthamil.Org

விண்ணு

தேவாரம்

விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வுஜரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே.
விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.
விண்ணு ளாரும் விரும்பப் படுவர்
மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர்
எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
நண்ணி னாரைநண் ணாவினை நாசமே.
விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை 
மண்ணு ளார்வினை தீர்க்கு மருந்தினைப் 
பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி 
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே.
விண்ணு எனத்தொடங்கும் தேவாரம்