Senthamil.Org

விண்ணினை

தேவாரம்

விண்ணினை விரும்ப வைத்தார் 
வேள்வியை வேட்க வைத்தார் 
பண்ணினைப் பாட வைத்தார் 
பத்தர்கள் பயில வைத்தார் 
மண்ணினைத் தாவ நீண்ட 
மாலினுக் கருளும் வைத்தார் 
கண்ணினை நெற்றி வைத்தார் 
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
விண்ணினை எனத்தொடங்கும் தேவாரம்