Senthamil.Org

விண்ணகத்

தேவாரம்

விண்ணகத் தான்மிக்க வேதத் 
துளான்விரி நீருடுத்த 
மண்ணகத் தான்திரு மாலகத் 
தான்மரு வற்கினிய 
பண்ணகத் தான்பத்தர் சித்தத் 
துளான்பழ நாயடியேன் 
கண்ணகத் தான்மனத் தான்சென்னி 
யானெங் கறைக்கண்டனே.
விண்ணகத் எனத்தொடங்கும் தேவாரம்