Senthamil.Org

விண்டொ

தேவாரம்

விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை 
விரிகடல் வருநஞ்சம் 
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய 
இறைவனை உலகத்தில் 
வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை 
வலஞ்சுழி யிடமாகக் 
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ 
டினிதிருந் தமையாலே.
விண்டொ எனத்தொடங்கும் தேவாரம்