Senthamil.Org

விண்டவர்தம்

தேவாரம்

விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண் 
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண்
மண்டலத்தி லொளிவளர விளங்கி னான்காண்
வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்
புண்டரிகக் கண்ணானும் புஜவின் மேலைப் 
புத்தேளுங் காண்பரிய புராணன் றான்காண்
தெண்டிரைநீர் வயற்புடைசூழ் திருவா ரூரிற்
றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.
விண்டவர்தம் எனத்தொடங்கும் தேவாரம்