Senthamil.Org

பாட்டுக்கும்

தேவாரம்

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி 
பல்லூழி யாய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி 
உள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
பாட்டுக்கும் எனத்தொடங்கும் தேவாரம்