Senthamil.Org

பாடுவார்

தேவாரம்

பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் 
ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே 
காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும் 
வேடனே குருகாவுஜர் வெள்ளடை நீயன்றே.
பாடுவார் எனத்தொடங்கும் தேவாரம்