Senthamil.Org

பாடக

தேவாரம்

பாடக மெல்லடிப் பாவையோடும் 
படுபிணக் காடிடம் பற்றிநின்று 
நாடக மாடுநள் ளாறுடைய 
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் 
சூடக முன்கை மடந்தைமார்கள் 
துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த 
ஆடக மாடம் நெருங்குகூடல் 
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
பாடக எனத்தொடங்கும் தேவாரம்