Senthamil.Org

பாட

தேவாரம்

பாட வல்லநல் மைந்த ரோடு பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர் வாழ்பொழில் சூழ்செழுமாடத் திருக்களருள்
நீட வல்ல நிமல னேயடி நிரை கழல்சிலம் பார்க்க மாநடம்
ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே.
பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள் 
கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடு 
கோடல் புஜத்தலர் கோழம்பத் துண்மகிழ்ந் 
தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே.
பாட வடியார் பரவக் கண்டேன்
பத்தர் கணங்கண்டேன் மொய்த்த புஜதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்
கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
பாட எனத்தொடங்கும் தேவாரம்