Senthamil.Org

பழகனை

தேவாரம்

பழகனை யுலகுக் கெல்லாம் 
பருப்பனைப் பொருப்போ டொக்கும் 
மழகளி யானை யின்றோல் 
மலைமகள் நடுங்கப் போர்த்த 
குழகனைக் குழவித் திங்கள் 
குளிர்சடை மருவ வைத்த 
அழகனை நினைந்த நெஞ்சம் 
அழகிதா நினைந்த வாறே.
பழகனை எனத்தொடங்கும் தேவாரம்