Senthamil.Org

பல்வீழ்ந்து

தேவாரம்

பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் 
பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம் 
இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம் 
இறையே பிரியா தெழுந்துபோதுங் 
கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் 
காதலியுந் தானுங் கருதிவாழுந் 
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் 
தூங்கானை மாடந் தொழுமின்களே.
பல்வீழ்ந்து எனத்தொடங்கும் தேவாரம்