Senthamil.Org

பல்லார்

தேவாரம்

பல்லார் தலைசேர் மாலைசூடிப் பாம்பும்புஜண் 
டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக் 
கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால் 
பொல்லா ரல்லர் அழகியர் புத்தூர்ப் புனிதரே.
பல்லார் பயில்பழனப் பாசூ ரென்றும்
பழனம் பதிபழமை சொல்லி நின்றார்
நல்லார் நனிபள்ளி யின்று வைகி
நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்
சொல்லார் ஒருவிடமாத் தோள்கை வீசிச்
சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும்
மல்லார் வயல்புடைசூழ் மாடவீதி 
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்
பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்
கல்லாதார் காட்சிக் கரியார் போலுங்
கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்
பொல்லாத புஜதப் படையார் போலும்
பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்
எல்லாரு மேத்தத் தகுவார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
பல்லார் எனத்தொடங்கும் தேவாரம்