Senthamil.Org

பலவுநாள்

தேவாரம்

பலவுநாள் தீமை செய்து 
பார்தன்மேற் குழுமி வந்து 
கொலைவிலார் கொடிய ராய 
அரக்கரைக் கொன்று வீழ்த்தச் 
சிலையினான் செய்த கோயில் 
திருஇரா மேச்சு ரத்தைத் 
தலையினால் வணங்கு வார்கள் 
தாழ்வராந் தவம தாமே.
பலவுநாள் எனத்தொடங்கும் தேவாரம்