Senthamil.Org

பற்றியோ

தேவாரம்

பற்றியோ ரானை யுரித்த 
பிரான்பவ ளத்திரள்போல் 
முற்றும் அணிந்ததோர் நீறுடை 
யான்முன்ன மேகொடுத்த 
கற்றங் குடையவன் றானறி 
யான்கண்டி யூரிருந்த 
குற்றமில் வேத முடையானை 
யாமண்டர் கூறுவதே.
பற்றியோ எனத்தொடங்கும் தேவாரம்