Senthamil.Org

பற்றாய்

தேவாரம்

பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் 
சேயிந்தப் பாரைமுற்றுஞ் 
சுற்றாய் அலைகடல் மூடினுங் 
கண்டேன் புகல்நமக்கு 
உற்றான் உமையவட் கன்பன் 
திருப்பா திரிப்புலியூர் 
முற்றா முளைமதிக் கண்ணியி 
னான்றன மொய்கழலே.
பற்றாய் எனத்தொடங்கும் தேவாரம்