Senthamil.Org

பற்றற்

தேவாரம்

பற்றற் றார்சேற் பழம்பதியைப் 
பாசூர் நிலாய பவளத்தைச் 
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் 
தீண்டற் கரிய திருவுருவை 
மூவெற்றி யூரில் விரிசுடரை 
விமலர் கோனைத் திரைசூழ்ந்த 
ஒற்றி யூரெம் உத்தமனை 
உள்ளத் துள்ளே வைத்தேனே. 
 
மூ வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று.
பற்றற் எனத்தொடங்கும் தேவாரம்