Senthamil.Org

பருவத்தில்

தேவாரம்

பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் 
அயனைப் படைத்த பரமன் 
அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு 
மரவிக்க நின்ற அரனுர் 
உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி 
யவையோத மோத வெருவித் 
தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் 
திருமுல்லை வாயி லிதுவே.
பருவத்தில் எனத்தொடங்கும் தேவாரம்