Senthamil.Org

பரவும்

தேவாரம்

பரவும் பரிசொன் றறியேன்நான் 
 பண்டே உம்மைப் பயிலாதேன் 
இரவும் பகலும் நினைந்தாலும் 
 எய்த நினைய மாட்டேன்நான் 
கரவில் அருவி கமுகுண்ணத் 
 தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை 
அரவந் திரைக்கா விரிக்கோட்டத் 
 தையா றுடைய அடிகளோ.
பரவும் எனத்தொடங்கும் தேவாரம்