Senthamil.Org

பன்னிய

தேவாரம்

பன்னிய மறையர் போலும் 
பாம்பரை யுடையர் போலுந் 
துன்னிய சடையர் போலுந் 
தூமதி மத்தர் போலும் 
மன்னிய மழுவர் போலும் 
மாதிடம் மகிழ்வர் போலும் 
என்னையும் உடையர் போலும் 
இன்னம்பர் ஈச னாரே.
பன்னிய எனத்தொடங்கும் தேவாரம்