Senthamil.Org

பனிவளர்

தேவாரம்

பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர 
னொடுதோழ மைக்கொள் பகவன் 
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும் 
இறைவன் இடங்கொள் பதிதான் 
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் 
வளர்தூம மோடி யணவிக் 
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து 
நிறைகின்ற கொச்சை வயமே.
பனிவளர் எனத்தொடங்கும் தேவாரம்