Senthamil.Org

பந்தத்தால்

தேவாரம்

பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப் 
பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ் 
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ் 
சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் 
சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற் 
தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங் 
கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக் 
காடார்புஜவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.
பந்தத்தால் எனத்தொடங்கும் தேவாரம்