Senthamil.Org

பத்திமையாற்

தேவாரம்

பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவு மேத்தும் இறைவன் றன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பத்திமையாற் எனத்தொடங்கும் தேவாரம்