Senthamil.Org

பத்தர்கட்

தேவாரம்

பத்தர்கட் கருளும் வைத்தார் 
பாய்விடை யேற வைத்தார் 
சித்தத்தை ஒன்ற வைத்தார் 
சிவமதே நினைய வைத்தார் 
முத்தியை முற்ற வைத்தார் 
முறைமுறை நெறிகள் வைத்தார் 
அத்தியின் உரிவை வைத்தார் 
ஐயனை யாற னாரே.
பத்தர்கட் எனத்தொடங்கும் தேவாரம்