தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன் படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத் தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே.