Senthamil.Org

தடநில

தேவாரம்

தடநில வியமலை நிறுவியொர் 
தழலுமிழ் தருபட அரவுகொ 
டடல்அசு ரரொடம ரர்கள்அலை 
கடல்கடை வுழியெழு மிகுசின 
விடமடை தருமிட றுடையவன் 
விடைமிசை வருமவ னுறைபதி 
திடமலி தருமறை முறையுணர் 
மறையவர் நிறைதிரு மிழலையே.
தடநில எனத்தொடங்கும் தேவாரம்