தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத் தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப் படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானைப் பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை நடுங்க ஆனைஉரி போர்த்துகந் தானை நஞ்சம் உண்டுகண் டங்கறுத் தானை மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.தடங்கை எனத்தொடங்கும் தேவாரம்