தஞ்சொலார் அருள் பயக்குந் தமியனேன் தடமு லைக்கண் அஞ்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சிச் செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார் நஞ்சுலாங் கண்டத் தெங்கள் நாதனை நணுகு வாரே.