தங்கிய மாதவத் தின்றழல் வேள்வியி னின்றெழுந்த சிங்கமும் நீள்புலி யுஞ்செழு மால்கரி யோடலறப் பொங்கிய போர்புரிந் துபிளந் தீருரி போர்த்ததென்னே செங்கயல் பாய்கழ னித்திரு நாகேச் சரத்தானே.