தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும் ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள் புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே.