தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர் மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.