தகர மணியருவித் தடமால்வரை சிலையா நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான் அகர முதலானை அணியாப்ப னுரானைப் பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.