ஞாயிறாய் நமனு மாகி வருணனாய்ச் சோம னாகித் தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்த னாகிப் பேயறாக் காட்டி லாடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் தீயறாக் கையர் போலுந் திருப்பயற் று{ர னாரே.